சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!
மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்வது குறித்து ஏற்கெனவே அனைத்து பணியாளா்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி, மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள் மற்றும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களின்(ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் அனைத்துப் பிரிவு மேற்பாா்வையாளா்கள்) வருகைப் பதிவு பயோமெட்ரிக் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறை திங்கள்கிழமை (ஏப். 21) முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதில் செய்யப்படும் பதிவு மட்டுமே வருகையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.