செய்திகள் :

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

post image

தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது ராணுவச் செயற்கைக்கோள் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 3.34 மணிக்கு செலுத்தப்படவுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் மூலம் வடகொரியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால் இது தென் கொரியாவின் மூன்றாவது ராணுவ செயற்கைக்கோளாகும். வடகொரியாவை கண்காணிக்க 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள் சிறியது முதல் பெரியது வரையிலான ஐந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தென் கொரியாவின் முதல் ராணுவ செயற்கைக்கோள் இதே கலிஃபோர்னியாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் இரண்டாவது செயற்கைக்கோள் கடந்த ஏப்ரலில் செலுத்தப்பட்டு வெற்றியடைந்த்து.

வடகொரியாவும் அதன் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இருப்பினும் கடந்த மே மாதம் செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் பாய்ந்த அதன் ராக்கெட் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

திமுக செயற்குழுவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம்!

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திமுக தலைவர்மு.க. ஸ்டாலின்தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று (... மேலும் பார்க்க

கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்!

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.கேரளத்திற்கு 16 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது, இதனால் கேரள எல்லை வரை தமி... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.இந்நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டா... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.22 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 22) காலை வினாடிக்கு 2938 கன அடியிலிருந்து, வினாடிக்கு 2886 கன அடியாக குறைந்துள்ளது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.இவ்விபத்தில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது, இடிபாடுகளில... மேலும் பார்க்க

இந்தியாவில் குறைந்துவரும் ஒட்டகங்கள்! உயர் அதிகாரி எச்சரிக்கை!

இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீண்ட காலத்திற்கு தண்ணீ... மேலும் பார்க்க