Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி
ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் இது போன்று வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இதற்கு ரவீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை ரவீனா கண்டுகொள்ளவில்லை. சில நேரங்களில் ரவீனா இதற்காக தனது கணவருடன் சண்டையும் போட்டுள்ளார். ரவீனாவிற்கு இன்ஸ்டாகிராமில் 34 ஆயிரம் பாலோயர்கள் இருக்கின்றனர். சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்த ரவீனாவின் கணவர் பிரவீன் திடீரென வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த போது ரவீனாவும், சுரேஷும் தனிமையில் இருப்பதை பார்த்த பிரவீன் தன் மனைவியிடம் இது தொடர்பாக சண்டையிட்டார். இச்சண்டை முற்றிய நிலையில் சுரேஷுடன் இணைந்து ரவீனா தன் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். குடும்பத்தினர் பிரவீன் எங்கே என்று ரவீனாவிடம் கேட்டதற்கு தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.
இது குறித்து பிரவீன் உறவினர்கள் போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது பிரவீன் உடல் அவரது வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ரவீனா வீட்டில் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் புறப்படுவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ரவீனாவும் தன் முகத்தை மூடிய படி இரு சக்கர வாகனத்தில் இருந்தார். அவர்களுக்கு நடுவில் பிரவீன் உடல் இருந்தது. சிறிது நேரத்தில் அதே இரு சக்கர வாகனம் பிரவீன் இல்லாமல் இருவரும் மட்டும் வந்தனர். இதையடுத்து ரவீனா மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிரவீன் - ரவீனாவுக்கு பிறந்த 6 வயது மகன் பிரவீனின் தந்தை வீட்டில் வசித்து வருகிறான்.