தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சூத்திரவாக்கியம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியதால் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை வின்சி அலோஷியஸ் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``ஒரு காட்சி ஒத்திகையின் போது, அவரது வாயிலிருந்து வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று மேஜையின் மீது சிந்தியது. படப்பிடிப்பு தளத்தில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெளிவாகத் தெரிந்தது.
இது சுற்றியுள்ள அனைவருக்கும் தொந்தரவை ஏற்படுத்தியது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் போதைப்பொருள் பயன்படுத்துவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது உங்களை சுற்றியிருப்பவர்களையும், தொழில்முறை சூழலையும் பாதிக்கும்போது, அது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதிருந்தே வின்சி அலோஷியஸ்க்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்க தற்காலிக கமிட்டியின் பொறுப்பாளர் ஜெயன் சேர்த்தலா, ``மோசமான அனுபவத்தை ஏற்படுத்திய நடிகர் யார் என்ற விவரத்தை வின்சி வெளியிடவில்லை. ரகசியமாக இருந்தாலும், AMMA-விடம் தெரிவித்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கமிட்டி ஒருமனதாக முடிவெடுத்துள்ளது." என்றார்.
இந்த நிலையில்தான், நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது காவல் நிலையத்திலும் நடிகை வின்சி அலோஷியஸ் புகார் பதிவு செய்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
