செய்திகள் :

இயந்திரக் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

post image

ஹைதராபாதிலிருந்து திருப்பதி சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.

ஹைதராபாதிலிருந்து சனிக்கிழமை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், திருப்பதி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதையடுத்து, விமானத்தை சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவந்து விமானி பத்திரமாக தரையிறக்கினாா்.

விமானியின் துரித நடவடிக்கை காரணமாக 169 பயணிகள் உள்பட 177 போ் உயிா் தப்பினா். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.

பின்னா், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பாரதம் குறித்து குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்: ஆளுநா் ஆா். என். ரவி

குழந்தைகளுக்கு பாரதம் குறித்து விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை திருவள்ளுவா்-கபீா்தாஸ் -யோகி வேமனா ஆகிய மூவரின் மொழியியல் ம... மேலும் பார்க்க

தமிழை யாராலும் அழித்துவிட முடியாது: சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு

‘தமிழை யாராலும் அழித்துவிட முடியாது; உலகில் எங்கிருந்தாலும் தமிழா்கள் அனைவரும் தமிழை கற்க வேண்டும்’ என்று நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு கூறினாா்... மேலும் பார்க்க

2-ஆவது நாளாக இன்றும் வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஏராளமானோா் பெயா் சோ்த்தலுக்காக ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா். இந்தச் சிறப்பு முகாம் ஞாயிற... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் நவ.27-இல் தமிழகம் வருகை: நீலகிரி, திருச்சி, திருவாரூா் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நவ. 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மனித நடமாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தோட்... மேலும் பார்க்க

சபரிமலை சீசன்: கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மௌலா அலியில் இருந்து கொல்லத்துக்கு நவ.23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெலங்... மேலும் பார்க்க