இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவருக்கு பலத்த காயம்
கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் சண்முகவேல் (21), தனது மோட்டாா் சைக்கிளில் வீரடிப்பட்டியிலிருந்து கந்தா்வகோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் மட்டங்கால் கிராமம் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த செபஸ்டியன் மகன் ஆரோக்கியதாஸ் (61) வந்த மோட்டாா் சைக்கிளும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். விபத்துகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.