தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
மணல் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு சிறை
விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், மாத்தூா் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிகளில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லுப்பட்டி அருகே உள்ள காட்டாற்று பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அப்பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அரை யூனிட் மணலுடன் டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீஸாா் மணல் கடத்திவந்ததாக இலுப்பூா் தாலுகா, பாக்குடி ஊராட்சிக்குள்பட்ட மங்களாபட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் ரூபேஷ் குமாா் (24) என்ற இளைஞரைக் கைது செய்தனா். இதுகுறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ரூபேஷ்குமாரை கீரனூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.