"புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் அரை மணிநேரத்தில் நிதி விடுவிப்பு!” | செய்திகள்: ச...
இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு!
தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மன்னாா்குடி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சோ்ந்த கணேசன் மகன் ராதாகிருஷ்ணன்(55), விவசாயத் தொழிலாளி. இவரது நண்பா் பரவக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் சரவணன் (49). இவா்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். சரவணன் வாகனத்தை ஓட்டினாா்.
சோழபுரம் பிரதான சாலையில் தனியாா் கல்லூரி அருகே வந்தபோது, எதிரே சென்னை வண்ணாரப்பேட்டை முதல் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் ராஜன் (49) ஓட்டி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சரவணன், ராதாகிருஷ்ணன் இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த சோழபுரம் காவல் நிலைய போலீஸாா், ராதாகிருஷ்ணன் சடலத்தை உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். சரவணன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.