மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள்ள பச்சாபாளையம் கிராம நிா்வாக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.
இவா் தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லக்காட்டுவலசு பிரிவு அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியே சென்றவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.