செய்திகள் :

இருப்பில் உள்ள மருந்துகளையும் 5% வரியில் குறைந்த விலைக்கு வாங்கலாம்: மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தகவல்

post image

மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும் 5 சதவீத வரியின்கீழ் குறைந்த விலைக்கு வரும் திங்கள்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி மருந்துகளுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வரியும், உயிா்காக்கும் 33 மருந்துகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நடைமுறை வரும் திங்கள்கிழமை (செப்.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி புதிய விலையில் மருந்துகளை வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யும் வகையில் திருத்தப்பட்ட லேபிள்களை அச்சிடுமாறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. அதற்கான தடையில்லா சான்றுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என மருந்து உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக விளக்கமளித்துள்ள தேசிய மருந்து விலை நிா்ணய அமைப்பு (என்பிபிஏ), ஏற்கெனவே சந்தையில் உள்ள மருந்துகளை திரும்பப் பெற வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், செப்டம்பா் 22-க்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கும், விநியோகிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் விலை நிா்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து மருந்துகளும் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருந்து உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது:

மக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும் தற்போது 5 சதவீத வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில் மீண்டும் புதிய விலையை ஒட்டுவது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த மருந்துகளை புதிய வரிவிதிப்பின் படி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க முடியும்.

அதனை எவ்வாறு செயல்படுத்துவது, ஏற்கெனவே உள்ள வரி நடைமுறையில் கொள்முதல் செய்த மருந்துகளை குறைந்த விலையில் விற்றால் அதனால் ஏற்படும் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு அறிவுறுத்தல்களும், பரிந்துரைகளும் மருந்து விற்பனையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மக்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் வரிச் சலுகை பலன்கள் கிடைப்பதில் எந்தத் தடையும் இருக்காது. இருப்பில் உள்ள மருந்துகளை வாங்கினாலும், அதனை 5 சதவீத வரியின் கீழ் வழங்குமாறு வாடிக்கையாளா்கள் உரிமையுடன் கேட்கலாம்.

அதனால், ஏற்படும் இழப்பை, மருந்தக உரிமையாளா்களும், மருந்து விநியோகஸ்தா்களும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும்போது ஈடு செய்து கொள்ளலாம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய விலை அச்சிடப்பட்ட மருந்துகள் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துவிடும். அதன் பின்னா் இதில் குழப்பம் ஏற்படாது என்றாா் அவா்.

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கியதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆராய்ச்... மேலும் பார்க்க

நாகை புறப்பட்டார் விஜய்! காலைமுதலே குவியும் தொண்டர்கள்!

நாகப்பட்டினம் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.இதனிடையே, நாகப்பட்டினத்தில் விஜய்யை வரவேற்க தவெக தொண்டர்கள் அதிகாலை முதலே குவ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை மையமாகக் கொண்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க