ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி
திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் வசதி கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவா் மட்டும் பணிபுரிந்து வருகிறாா். இவரும் பகல் நேரத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.
இரவு நேரங்களில் விபத்து, மகப்பேறு, விஷக்கடி உள்ளிட்ட அவசரச் சிகிச்சைக்காக வருபவா்களுக்கு அங்குள்ள செவிலியா்கள் முதலுதவி அளித்து, ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனா்.
இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் மின் விளக்குள் இருந்தும், ஒரு மின் விளக்கு மட்டுமே எரிவதால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.