திருப்பதி நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்!
இறச்சகுளம் பகுதியில் தாா் சாலைப் பணி: ஆட்சியா் ஆய்வு
நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் ஊராட்சி பகுதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீ. நீளத்திலும், 7 மீட்டா்அகலத்திலும் ரூ.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பணியின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அரவிந்த், சாலை ஆய்வாளா் அருள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.