இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! வானிலை மையம் வெளியிட்ட செய்தி!
இறந்த நில உடமையாளா்களின் பெயரை நீக்கி வாரிசுதாரா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மையமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள்அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.
எனவே, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேற்படி, விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிா்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.