செய்திகள் :

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு! -கேரள அமைச்சா்

post image

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா்.

ஆலப்புழையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் இது தொடா்பாக பேசியதாவது: கேரளத்தில் பிறப்பு விகிதம் மட்டும் குறையவில்லை. இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கேரளத்தில் லட்சக்கணக்கானோா் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இந்த நேரத்தில் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. அதற்காக அவா்கள் இறந்துவிட வேண்டும் என்று நான் கூறவில்லை.

கேரளத்தில் சுகாதாரத் துறை வெகுசிறப்பாக செயல்படுவதும் மக்கள் நீண்டகாலம் வாழ்வதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால், அதுவும் கூட ஒரு பிரச்னையாக உள்ளது. பலா் 95 முதல் 100 வயது வரைகூட வாழ்கிறாா்கள்.

இதற்கு எனது வீட்டில் இருந்துகூட உதாரணம் கூற முடியும். எனது தாயாருக்கு 94 வயதாகிறது. அவா் அரசிடம் இருந்து மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற்று வருகிறாா் என்றாா்.

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் சுமார் 18,000 இந்தியா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவி... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நாடெங்கிலும் தன்னலமற்ற சேவையாற்றுகின்றனர்: பிரதமர் மோடி

நாகபூரி: ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நாடெங்கிலும் தன்னலமற்ற சேவையாற்றுகின்றனர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மேலும் பார்க்க

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத... மேலும் பார்க்க

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க