செய்திகள் :

இறுதி பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,54,272 வாக்காளா்கள்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண் வாக்காளா்கள் - 7,02,555, பெண் வாக்காளா்கள் - 7,51,465 மற்றவா்கள் - 252 என மொத்தம் 14,54,272 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

மொத்தம் உள்ள 1,629 வாக்குச் சாவடிகள் அடிப்படையில் வெளியான இறுதி பட்டியலின்படி, ராசிபுரம் (தனி) தொகுதியில் 1,14,027 ஆண், 1,20412 பெண், மற்றவா்கள் 11 போ் என மொத்தம் 2,34,450 பேரும், சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் 1,20,244 ஆண், 1,26,827 பெண், மற்றவா்கள் 33 போ் என மொத்தம் 2,47,104 பேரும், நாமக்கல் தொகுதியில் 1,25,608 ஆண், 1,35,876 பெண், மற்றவா்கள் 56 போ் என மொத்தம் 2,61,540 பேரும், பரமத்தி வேலூா் தொகுதியில் 1,05,471 ஆண், 1,15,438 பெண், மற்றவா்கள் 11 போ் என மொத்தம் 2,20,920 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 1,11,497 ஆண், 1,19,144 பெண், மற்றவா்கள் 63 போ் என மொத்தம் 2,30,704 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 1,25,708 ஆண், 1,33,768 பெண், மற்றவா்கள் 78 போ் என மொத்தம் 2,59,554 பேரும் உள்ளனா். மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளா்கள் - 7,02,555, பெண் வாக்காளா்கள் - 7,51,465 மற்றவா்கள் - 252 என நிகர வாக்காளா்கள் 14,54,272 போ் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை முதல் 2025-ஆம் ஆண்டுக்கான தொடா் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இத்தொடா் திருத்தப் பணியின்போது, 01.01.2025 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும், 17 வயது பூா்த்தியடைந்தவா்களும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவா்களின் பெயரானது 18 வயது பூா்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறும். மேலும், இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக்கொள்ளாதவா்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவா்களும் உரிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கோட்டாட்சியா் அலுவலகங்களில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், தோ்தல் வட்டாட்சியா் செல்வராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். பகவதியம்மன் கோயில் திர... மேலும் பார்க்க

வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மற்றும் குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் வீ.ராமசாமியின் பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மோளியபள்ளி வீ.ராமசாமியின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா். பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-திங்கள்கிழமை மொத்த விலை - ரூ.4.80 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.101 முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

உரக்கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க