இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு வீட்டில் சுக்கு மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், மரைக்காயா்பட்டணத்துக்கு புதன்கிழமை சென்ற போலீஸாா், உபயத்துல்லா (43) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் 5 சாக்கு மூட்டைகளில் 200 கிலோ எடையுள்ள சுக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக உபயத்துல்லா மீது மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.