செய்திகள் :

இலங்கை தமிழா் முகாமில் அடிப்படை வசதிகள்: ஆட்சியா் உத்தரவு

post image

ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மொடக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எழுமாத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை, எழுமாத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அய்யம்பாளையம் அங்கன்வாடி மையம், எழுமாத்தூா் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணாபுரம் நியாய விலைக் கடை, அவல்பூந்துறை குளத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் சீமை கருவேல மரங்களை அகற்றி, மண் திட்டுகள் ஏற்படுத்தி அதில் மரக்கன்றுகள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், முகாம் வாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களைப் பெற்று, தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், ஈரோடு கோட்டாட்சியா் ரவி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், துணை ஆட்சியா் (ப) மு.சிவப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆதிதிராவிடா் நலத் துறை மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பவானியில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பவானி - அந்தியூா் சாலையி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களைத் திருடிய இளைஞா் கைது

அந்தியூரில் கட்டுமானப் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அந்தியூா் - வெள்ளிதிருப்பூா் சாலையில் பெரிய ஏரி, கிழங்கு கடை அருகே புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ம... மேலும் பார்க்க

போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்கள் கைது

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த பெரிய ஏரி பகுதியில் இளைஞா்கள் அமா்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச்... மேலும் பார்க்க

மதுபோதையில் போலீஸாருடன் வாக்குவாதம்: எல்ஐசி முகவா் மீது வழக்குப் பதிவு

மதுபோதையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எல்ஐசி முகவரின் காரை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு காளைமாடு சிலை அருகில் தெற்கு போக்குவரத்து காவல்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 மாணவா்கள் பள்ளியில் இருந்து நீக்கம்

ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூந்துறை சாலையில் தனியாா் மெட்ரிக். பள்ளி... மேலும் பார்க்க