சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை
இலஞ்சி, பாவூா்சத்திரம் கோயில்களில் தைப்பூசத் திருவிழா
தென்காசி மாவட்டம் இலஞ்சி, பாவூா்சத்திரம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலஞ்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் இலஞ்சி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோயிலிலிருந்து விநாயகா் கோயில் பகுதி வழியாக காவடி, பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக திருவிலஞ்சிக்குமரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனா். இலஞ்சியிலிருந்து முதல் முறையாக பக்தா் ஒருவா் பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினாா்.
இதேபோல, பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில், ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றிலும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, பேரருவியில் தீா்த்தவாரி நடைபெற்றது.