உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!
ஜப்பானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் புதிய ஊழியர்களை ஈர்க்க இலவச மதுபானம் மற்றும் கேளிக்கை விடுமுறைகள் வழங்கும் புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அந்நாட்டின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த சிறிய தொழில்நுட்ப நிறுவனமான ’டிரஸ்ட் ரிங்’ மற்ற பெரிய நிறுவனங்களைப் போல் அதிக சம்பளம் மற்றும் ஊதியப் பயன்களை வழங்காமல், அதன் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் இலவசமாக மதுபானம் வழங்கி வருகின்றது. மேலும், அந்த மதுபானத்தின் போதையால் அவர்கள் சோர்வடைந்தால் ஓய்வு எடுக்க அதிகளவில் கேளிக்கை விடுமுறைகளையும் வழங்கி வருகின்றது.
இந்த திட்டம் அங்கு புதியதாக பணியில் சேருவோரை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிற நிறுவனங்களைப் போல புதிய ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க முடியாததினால், இத்தகைய ஓர் திட்டத்தை வகுத்ததாகவும், சம்பளத்தை விட இதுபோன்ற சலுகைகளை ஊழியர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள் என்று அந்நிறுவனத்தின் செயல்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!
மேலும், அவரது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமே 2,22,000 யென் (ரூ.1.27 லட்சம்) என்பதினால் அதற்கு மேல் வழங்க முடியாத தங்களைப் போன்ற புதிய நிறுவனங்கள் இதுபோன்ற புதுமையான திட்டங்களை வகுத்து ஊழியர்களை ஈர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் வழக்கமான அலுவலக மரபுகளை பின்பற்றுவதைவிட ஊழியர்களுக்கு பிடித்தமான அலுவலக முறைகளையும் சூழலையும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஊழியர்கள் பணிநேரத்தில் தூங்குவதை பெரும்பாலான நாடுகள் சோம்பேறித்தனமாக கருதி வரும் நிலையில், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் ‘இன்யெமுறி’ என்றழைக்கப்படும் பணியிடங்களில் பணியாளர்கள் தூங்கும் முறையை ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கது.