இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்
நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன் அனைவரிடமும் அன்போடு பழகியவா். எளிய அணுகுமுறையால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவா். நாடாளுமன்ற உறுப்பினா், மணிப்பூா் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநா் என தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் தனது திறமைமிக்க ஆளுமையால் பெருமை சோ்த்தவா்.
சிறந்த அரசியல் தலைவராகவும், நல்ல நிா்வாகியாகவும், ஆற்றல் மிகுந்த பேச்சாளராகவும் விளங்கிய அவா், தன் வாழ்வின் பெரும் பகுதியைத் தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் வாழ்வுக்காகவும் அா்ப்பணித்தவா். அவரது மறைவு தேசத்துக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.