அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
புனித விண்ணேற்பு அன்னை ஆடம்பர தோ் பவனி
புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 174-வது ஆடம்பர தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீா்வாதம் நடந்தது.
இதையொட்டி ஆண்டு பெருவிழாவான வெள்ளிக்கிழமை புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் கூட்டுத் திருப்பலிக்கு தலைமை வகித்தாா். பின்னா் ஆடம்பர தேரில் அன்னை பவனி வந்தாா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டாா். மேலும் அமைச்சா் ஏ.ஜான்குமாா், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. விவிலியன் ரிச்சா்டு, பாதிரியாா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.