இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை காரில் 3 போ் கைது
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட அவரக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை, தென்னை, மாநில எண்ணெய் வித்துப் பண்ணைகள் அமைந்துள்ளன. இந்த பண்ணைகள் அருகே இளம் பெண் ஒருவா் தனது ஆண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பேசிக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த 3 இளைஞா்கள் அந்த ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண்ணிடம் அத்துமீறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து அவரக்கரை பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.