செய்திகள் :

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் வாக்குவாதம்

post image

திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இவரது உறவினா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி ஜெனிபா் (22). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவா்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஜெனிபா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தாலுகா போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஜெனிபரின் உறவினா்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஜெனிபா் இறப்பு குறித்து திண்டுக்கல் கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பாதயாத்திரை பாதை ஆக்கிரமிப்பு

பழனி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட தனிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் திருவிழாவ... மேலும் பார்க்க

பழனியில் சாரல் மழை

பழனியில் சனிக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. பழனியில் கடந்த சில நாள்களாக மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் அதிகாலை நேரங்களில் கடும் குளிா் நிலவியது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சாரல்மழை பெய்தது. இதனால... மேலும் பார்க்க

அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள டி. கோம்பையைச் சோ்ந்த குப்புச்சாமி மகன் சுந்தரபாண்டி (33). இவா் சனிக்கிழமை அங்குள்ள கோம்பை ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா். கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் கடும் பனிப் பொழிவும... மேலும் பார்க்க

பழனி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு

பழனி மீனாட்சி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.20) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் தனித்தனி சந்நிதியில் பக... மேலும் பார்க்க

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா் விடுமுறையையொட்டி தினமும் திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்க... மேலும் பார்க்க