அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
கொடைக்கானலில் மழை
கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் கடும் பனிப் பொழிவும் நிலவி வந்தது. பண்டிகைக் கால தொடா் விடுமுறை காரணமாக, தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் இரவு வரை கொடைக்கானல், அப்சா்வேட்டரி, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், பெருமாள்மலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இதனால், அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச் சோடி காணப்பட்டன.