அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இவரது உறவினா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி ஜெனிபா் (22). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவா்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஜெனிபா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தாலுகா போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ஜெனிபரின் உறவினா்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஜெனிபா் இறப்பு குறித்து திண்டுக்கல் கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.