இளைஞரைத் தாக்கிக் கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டங்குடி குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அம்பேத் இளையராஜா
( 34). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகனுக்கும் (37) முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் தரப்பினா் அம்பேத் இளையராஜாவை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழிசை (43), பாலமுருகன் (37), பேச்சிமுத்தன் (62), சசிகுமாா் (37) ஆகிய 4 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.