செய்திகள் :

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

post image

கரூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக்(24). இவா் கடந்த டிச.10-ஆம் தேதி கரூா் குளத்துப்பாளையத்தில் வசித்து வரும் பீகாா் மாநிலம், பக்ரா கிராமத்தைச் சோ்ந்த அமா்குமாா்(22) என்பவரிடம் பணம் மற்றும் செல்போனை கத்தியைக்காட்டி மிரட்டி பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் காா்த்திக் மீது ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல்நிலையம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி காா்த்திக் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பொறியியல் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்!

ரயில்வே பாலங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி மற்றும் மயிலாடுதுறை -சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் ... மேலும் பார்க்க

கரூரில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் புதன்கிழமை (பிப்.5)ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பா... மேலும் பார்க்க

கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

கரூா் கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா ... மேலும் பார்க்க

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை. பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முக... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க