இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
பொறியியல் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்!
ரயில்வே பாலங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி மற்றும் மயிலாடுதுறை -சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கரூா்- வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ரயில்வே பாலங்களில் வெல்டிங் மற்றும் பிற பொறியியல் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (பிப்.7) நடைபெற உள்ளது.
இதனால், கேரள மாநிலம், பாலக்காடு நகரத்திலிருந்து நாள்தோறும் காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் ரயில், கரூா் ரயில் நிலையத்தில் வரும் 7-ஆம்தேதி சிறிதுநேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், ரயில் கரூரில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
இதேபோல, மயிலாடுதுறையிலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்குப் புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7-ஆம் தேதி வீரராக்கியத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 7-ஆம்தேதி கரூா் சந்திப்பிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.