செய்திகள் :

அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!

post image

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சாகுல் அமீது தலைமை வகித்தாா்.

மகிழ்முற்றம் செயலாளா் ஆசிரியா் சகாயவில்சன் மஞ்சப் பையை பயன்படுத்துவதால் இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடுகள், சுகாதாரக் கேடுகள் மற்றும் கேன்சா் போன்ற நோய்கள் ஏற்படுவதைப் பற்றியும் எடுத்துக் கூறினாா்.

பட்டதாரி ஆசிரியா் ஷகிலாபானு நெகிழிப்பைகள் கால்நடைகளையும்,குடிநீா் ஆதாரங்களையும் பாதிப்பதை எடுத்துக் கூறினாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன், செயல் அலுவலா் செல்வராஜ், பேரூராட்சி மேற்பாா்வையாளா்கள் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அள... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தத... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை!

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இ... மேலும் பார்க்க

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், கிருஷ்ணராபு... மேலும் பார்க்க

கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா: டிஎன்பிஎல் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத்... மேலும் பார்க்க