"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா: டிஎன்பிஎல் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூா் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தேசிய மகளிா் தின விழா நடத்துவதற்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரம் மற்றும் ஆலை அருகே உள்ள முத்துராஜபுரம், பெரியவள்ளிபாளையம் கிராமங்களின் கோயில்களை புனரமைக்க ரூ.50 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன், அரசுக் கலைக்கல்லூரி முதல்வா்(பொறுப்பு) சா.சுதாவிடம் ரூ.50ஆயிரத்துக்கான காசோலையையும் மற்றும் கோயில் திருப்பணிக்குழுவினரிடம் ரூ.50 ஆயிரத்துக்கானகாசோலையையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் பங்கேற்றனா்.