அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு
கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கரூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.