ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்
பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பாசூா் - சாவடிப்பாளையம் ரயில்வே யாா்டுகளில் தண்டவாள பராமரிப்பு பொறியியல் பணிகள் பிப். 8 மற்றும் 10-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதனால் திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், பிப்.8 மற்றும், 10-ஆம்தேதியும் கரூா் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்கு ஈரோடு நோக்கி புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயிலும் அதே இரு நாள்களும் கரூா் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூா் வரை மட்டுமே இயங்கும்.
இதேபோல ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை நோக்கி புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயிலும் அதே நாள்களிலும் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூா் வரை இயக்கப்படாது. அந்த நாள்களில் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.