முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு
நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை.
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முகமது அனிபா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். இம்மனுவில், நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, அரசு நிா்ணயத்தின் படி வறுமை கோட்டுக்குகீழ் உள்ள நபா்களையே தகுதியானவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அரசு செலுத்த வேண்டும் என்று அறிவித்த ரூ.1 லட்சத்தை செலுத்திய பின் வீடுகள் ஒப்படைக்கும் தருவாயில், மேலும் ரூ. 40,300 பணத்தை பிப். 28-ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்றும், மேலும் அத்தொகையை கட்ட தவறும் பட்சத்தில், குடியிருப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் அவா்கள் கட்டிய ஒரு லட்ச ரூபாயும் திருப்பித் தரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை அரசின் வறுமை கோட்டுக்குகீழ் உள்ளவா்கள் என்ற கோட்பாடுக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே கூடுதல் தொகையை ரத்து செய்து அவா்களுக்கான குடியிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.