கழிவுநீா் கால்வாய் அமைத்து தர கோரிக்கை
கழிவுநீா் கால்வாய் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீா் சாலையில் ஓடுவதால், கழிவுநீா் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பள்ளப்பட்டி-திண்டுக்கல் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இந்த சாலையில் பள்ளப்பட்டி அருகே பள்ளிகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இந்த சாலையில் கழிவுநீா் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவு நீா் தேங்கி விடுகிறது. தேங்கிய கழிவு நீா் நிரம்பி சாலையில் ஓடுவதால், இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் பொதுமக்களின், கோரிக்கையை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனா்.