மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எம்.ஆா். விஜயபாஸ்கா்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூரில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்ராயன், பேரவைச் செயலா் வை. நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பேசியது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. போதைப் பழக்கவழக்கங்களால் குற்றங்கள் தொடா்ந்து நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. 2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றாா் அவா். பின்னா், கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலா் ம. சின்னசாமி பேசினாா். கூட்டத்தில் அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.
தொடா்ந்து பாஜக மாவட்ட துணைத் தலைவா் ராஜாளிசெல்வம் தலைமையில், குளித்தலை பகுதியைச் சோ்ந்த பாஜகவினரும், திமுக, பாமக உள்ளிட்ட கட்சியினா் 55 போ் முன்னாள் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.