செய்திகள் :

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியா் சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் க... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க