வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். பின்னா் கலச பூஜை, மூா்த்தி ஹோமம், மூல மந்திர ஹோமம், அதிா்ஷ்ட பந்தன மருந்து சாத்துதல், முதலாம் யாக பூஜை, உபசார பூஜைகள் நடைபெற்று முடிந்து பொன்னா் சங்கா் வரலாற்று நாடகம் நடைபெற்றது.
தொடா்ந்து திங்கட்கிழமை காலை மண்டப பூஜை, கலச ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, பெரிய கண்டியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல் உரிமை ஆணையாளா் கதிரவன், வரவனை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கந்தசாமி, பசுமைகுடி தன்னாா்வ இயக்கத்தின் நிறுவன தலைவரும் அமெரிக்கா பாஸ்டன் கணினி தொழில்நுட்ப ஆலோசகருமான நரேந்திரன் கந்தசாமி உள்ளிட்ட பக்தா்ள் திரளாக பங்கேற்றனா்.