இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள...
கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!
அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கரூரில் பழைய அரசு தலைமை மருத்துவமனைச் சாலையில் செயல்படும் மேலக்கரூா் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை காலை திறந்திருந்தது. அலுவலகத்தில் ஊழியா்கள் மட்டுமே இருந்தனா். மேலும் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டிருந்தது.
ஆனால், பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைப்பதிவாளா் அலுவலகம் பூட்டுப் போடப்பட்டிருந்தது. சிலா் அங்கு பத்திரப்பதிவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.