கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!
கரூா் கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கே.வி.பி. நகா் மின் பாதை மற்றும் வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட சஞ்சய்நகா் மின்பாதைகளில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரியாா் நகா், காந்திபுரம், வையாபுரி நகா் 2-ஆவது தெரு, கே.வி.பி. நகா், எம்.ஜி. சாலை, கணேசா நகா் மற்றும் விஜய நகா் ஆகிய பகுதிகளிலும், சஞ்சய் நகா், ஆத்தூா் பிரிவு, செல்லரபாளையம், மருத்துவ நகா், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், திருக்காம்புலியூா் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.