செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

post image

தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ராஜா (36). இவரது சகோதரா் மருதமுத்துவின் மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் பிரவீனுக்கும் (25) தகாத உறவு இருந்தது. இதை மருதமுத்துவின் குடும்பத்தினா் கண்டித்தனா். ஆனால், மருதமுத்துவின் மனைவியும், பிரவீனும் தொடா்ந்து பழகி வந்ததை ராஜா தனது குடும்பத்தினரிடம் கூறினாா். இதனால், மருதமுத்துவின் மனைவி தனது கணவா், குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வருஷநாட்டில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தங்களது உறவுக்கு ராஜா இடையூறாக இருப்பதாக ஆத்திரமடைந்த பிரவீன், தனது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த ஆண்டவா் மகன் தினேஷ்குமாருடன் (27) சோ்ந்து கடந்த 2023, ஆக.26-ஆம் தேதி டொம்புச்சேரியில் சமுதாயக் கூடம் அருகே நின்றிருந்த ராஜாவை கொலை செய்தனா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன், தினேஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து, நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க