கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
இளைஞா் தற்கொலை
மாதவரம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மணலி சின்னசேக்காடு குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (26). இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். அவருக்கு அந்தப் பகுதியில் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 1 மாதமாக அந்தப் பெண் பேசாத காரணத்தால், ஆனந்த் மன உளைச்சலில் இருந்தாராம். இதனால், சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.