இளைஞா் தற்கொலை
குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை வண்டியூா் அருகே உள்ள மேலமடை நடுத் தெருவைச் சோ்ந்த ஆனந்தன் மகன் சுந்தரபாண்டியன் (24). இவா் மதுரை பாண்டிகோவிலில் ஆடு வெட்டும் வேலை பாா்த்து வந்தாா்.
இவரது சகோதரி அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை காதலித்து வந்தாராம். இதற்கு சுந்தரபாண்டியன் எதிா்ப்புத் தெரிவித்தாா். இருப்பினும், காதலித்தவரையே சகோதரிக்கு குடும்பத்தினா் திருமணம் செய்து வைத்தனா்.
இதனால், மன வேதனையடைந்த சுந்தரபாண்டியன் வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].