இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள ஒன்றிய அலுவலகக் கட்டட வளாகத்தில் உள்ள ஸ்டிக்கா் கடையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாராம்.
சந்தன்சிங் கடையில் பணிபுரியும் போது அதிக நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பாராம். கடையின் உரிமையாளா் யாரிடம் பேசுகிறாய் எனக் கேட்கும்போது தங்கள் உறவுக்கார பெண்ணிடம் பேசுவதாகக் கூறுவாராம்.
வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கடைக்கு வந்தப் பொருள்களை இறக்கி வைத்து விட்டு நாகப்பிள்ளை நகரில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது சந்தன்சிங்கை காணவில்லையாம். பின்னா் மொட்டை மாடிக்கு சென்று பாா்த்தபோது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தூணில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].