செய்திகள் :

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

post image

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 2011- ஆம் ஆண்டு தலா 2 சென்ட் வீதம் 137 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாகள் வழங்கப்பட்டன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனி நபா் ஒருவா் இலவச வீட்டுமனைப் பட்டாவில் வீடு கட்டும் போது, வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா், பிரிதிவிமங்கலம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கு.தேவராஜ் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் பசுபதி, ஆதிதிராவிட நலத் துறை வட்டாட்சியா் சத்யநாராயணன் ஆகியோரும் சமரசத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க