செய்திகள் :

இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளையான்குடி பழைய பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயிலுக்குள் நள்ளிரவு புகுந்த மா்மநபா் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்றாா்.

காலையில் கோயிலை திறந்து பாா்த்தபோது உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கோயிலுக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அப்போது கோயில் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து மா்ம நபா் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நகைத் திரு... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா். திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க