சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை வனப்பகுதியில் ஒடுவன்பட்டியிலிருந்து மேலவண்ணாயிருப்பு, கட்டுக்குடிபட்டி வழியாக பொன்னமராவதி செல்லும் மலைப்பாதையில் மா்ம நபா்களால் ஏராளமான மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன.
காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், சிரிஞ்சுகள், டானிக்குகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளான குரங்கு, மான்கள், காட்டுப்பன்றிகள், முயல்கள், காட்டெருமைகள், அரிய வகை மர அணில்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே மருத்துவக் கழிவுகளை வீசிச் சென்றவா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவற்றை அப்புறப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.