தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த அப்துல்சலாம் மகன் அப்துல்சமது (50). இவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது அவரிடமிருந்து 41 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.