செய்திகள் :

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினாா். இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா் மீது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் ராஜேந்திரனின் கால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, இழப்பீடு கோரி அவா் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இருப்பினும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து, அவா் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சோ்த்து ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்கவும், இல்லாதபட்சத்தில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

பல்கலைக்கழக விடுதியில் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். திண்டுக்கல் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது: 16 கைப்பேசிகள் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா்கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 16 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் நகரில் கடந்த 4 நாள்களாக... மேலும் பார்க்க

டிச.7-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க

புதியப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியா்களை நியமிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

நத்தம்: நத்தம் அருகே இழப்பீட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத... மேலும் பார்க்க

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் 1000 பேருக்கு பயிற்சி - ஆட்சியா்

திண்டுக்கல்: கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் 1000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா். திண்டுக்கல் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்... மேலும் பார்க்க

ரேசன் அரிசி பதுக்கியவா் கைது

பழனி: பழனி அடிவாரம் பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பழனி நகா் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு, தனியாா் மாவு ஆலைகளுக்கு விற்கப்படுவதாக திண்டுக்கல் ம... மேலும் பார்க்க