Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கின்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "அண்ணா திமுக எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி திமுகதான் எங்களுக்கு எதிரி. எடப்பாடி என்ற துரோக மனிதர்தான் எங்கள் எதிரி" எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் மதுரைக் கப்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மூன்றுபேரும் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கின்றனர். இது ஏற்கெனவே போட்ட திட்டம்தான். இப்படிப்பட்ட துரோகிகள் இருப்பதனால்தான் அதிமுக 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரமுடியவில்லை.
ஓபிஎஸ்ஸா அதிமுகவை ஒருங்கிணைக்கப் போகிறார். சில நாட்களுக்கு முன்னர் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறினார். உண்மையான அதிமுக தொண்டனின் வாயிலிருந்து அந்த வார்த்தைவராது. 4 ஆண்டு காலமாகவே துரோகத்தை வீழ்த்துவோம் என டிடிவி சொல்லி வருகிறார். இவர்களால் எப்படி இணைய முடியும், இவர்கள் திமுகவின் பி டீமாக இருப்பார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை தலைமையின் கருத்தைக் கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர் காலம் முதல் அணி பிறழாமல் இருப்பது எங்களது அதிமுகதான். பயிர் செழிக்க வேண்டுமென்றால் களைகளை எடுக்க வேண்டும். களைகள் எடுக்கப்பட்டிருக்கிறது பயிர் செழிக்கும்." எனப் பேசியுள்ளார்.


















