போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்
இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?
இஷான் கிஷான் அதிரடி; ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், அபிஷேக் சர்மா 34 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின், இஷான் கிஷன் மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இஷான் கிஷன் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி வரை களத்தில் இருந்த இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?
ஆர்சிபி தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, சூயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.